வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ள பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று (28) திருத்தந்தை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸினை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு வத்திக்கான் நகரின் புனித பீட்டர் சதுக்கத்தில்  காலை 11.00 மணிக்கு நடைபெற்றுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெளிவுபடுத்தி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.