நாடளாவிய ரீதியாக உள்ள மாகாண பாடசாலைகளில் 8,000ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன் 22, 000 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக அரசாங்கத்திற்கு இணைத்து கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
196 total views, 1 views today