Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeWorld Newsபாக்கிஸ்தான் வெள்ளத்தில் 1000ஐ எட்டும் மரணங்கள்

பாக்கிஸ்தான் வெள்ளத்தில் 1000ஐ எட்டும் மரணங்கள்

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் மழை காரணமாக இதுவரை நாடு முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதியிலிருந்து மக்களை மீட்க அந்நாட்டு அரசு ராணுவ உதவியை கோரியுள்ளது. இந்த பாதிப்புகளால் 1,456 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 982 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கனமழை மேலும் ஒருவாரத்திற்கு தொடரும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்ததால் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும், ஏராளமான அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதியில் இருந்து தற்போது வரை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட இடர்பாடுகளில் சிக்கி இதுவரை 937 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில் 343 பேர் குழந்தைகளும் அடங்குவர். அதிகபட்சமாக சிந்துவில் மட்டும் 306 பேர் உயிரிழந்துள்ளனர். பலுசிஸ்தானில் 234 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. மீட்பு படையினரும் தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 231 total views,  3 views today

RELATED ARTICLES

Most Popular