பாகிஸ்தானில் புகழ்பெற்ற மலைஸ்தலங்களில் ஒன்றான முர்ரே பகுதியில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக ஒன்பது சிறுவர்கள் உட்பட 22 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தாழ்வெப்பநிலை காரணமாக இறந்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் ஒரு இஸ்லாமாபாத் பொலிஸ் அதிகாரியும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் அடங்குவதாக சக பொலிஸ் அதிகாரி அதிக் அகமட் தெரிவித்தார்.
முர்ரி ஹில்ஸ் ரிசார்ட் பகுதியில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அதிகாலை 4 அடிக்கும் (122 செ.மீ) பனிப்பொழிவு ஏற்பட்டதனால் வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கார்கள் பனிப்பொழிவில் சிக்கியதாக உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அஹ்மட் கூறினார்.
வெப்பநிலை மைனஸ் 8 டிகிரி செல்சியஸ் (17.6 டிகிரி ஃபாரன்ஹீட்) ஆக குறைந்தது.
பாகிஸ்தானில் புகழ்பெற்ற மலைஸ்தலங்களில் ஒன்றாக முர்ரே பகுதி திகழ்கிறது. தற்போது அங்கு கடும் பனிப்பொழிவு பெய்துவருகிறது. ஆட்களே உறைந்துபோகும் அளவுக்கு உறைபனி நிலவுகிறது. இதனால் அங்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
15 ஆண்டுகளில் இல்லாத
அளவு சுற்றுலா பயணிகள் குவிந்ததாக கூறப்படுகிறது. சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் முர்ரி நோக்கி வரும் பாதைகளில் வந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நகர முடியாத நிலை ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அப்போது உறைபனி நிலவியதால் சுற்றுலா பயணிகளில் பலர் தங்கள் கார்களிலேயே உறைந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
167 total views, 1 views today