இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலிய அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக மொஹமட் ரிஸ்வான் 67 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் 38 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில், 177 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணிசார்பில் அதிகபடியாக டேவிட் வோர்னர் 49 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் ஷதாப் கான் 26 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
181 total views, 1 views today