முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் கொள்கைக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைக்கும் இடையில் பெரிதளவிலான வேறுப்பாடு கிடையாதென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்கபோவதில்லை என்றும் நாட்டுக்கு பயனுடைய தீர்மானங்களுக்கு எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆதரவு வழங்குவோம் என்றும் அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளும், தொடர்ந்தும் பாராளுமன்றில் சுயாதீன அணியாக செயற்பட தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்தார்.
201 total views, 1 views today