கடந்த 2021 ஜூலை 8 ஆம் திகதி பெசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினரானார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்து்ககு பெசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நிதியமைச்சராகவும் பதவியேற்றிருந்தார்.
நாட்டில் ஏற்பட்ட பல்வேறு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி மிக்க சூழலையடுத்து, நிதியமைச்சு பதவியிலிருந்து அண்மையில் அவர் விலகியிருந்தார்.
இந்நிலையில், தற்போது அவர் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளதாகவும், விசேட அறிவிப்பொன்றின் ஊடாக நாளைய தினம் அவர் செய்தியாளர் சந்திப்பொன்றில் இதனை அறிவிக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படடுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இந்த செய்தியாளர் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
277 total views, 2 views today