அமைச்சுப் பதவியை எப்போது விலகுவது தொடர்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) விளக்கம் அளித்துள்ளார்.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டால் அந்த நொடியே தாம் பதவியை துறப்பேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றது. அரசாங்கம் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் முனைப்புக்களில் செயற்பட்டு வருகின்றது.
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் உடன்படிக்கை செய்து கொண்டால், கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படக்கூடும்.
ரூபாவின் பெறுமதியை மிதக்கச் செய்தல், பொருட்களின் விலையை கட்டுப்படுத்தாமை உள்ளிட்டன சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளாக காணப்படுகின்றன.
கடன் பெற்றுக் கொள்ளும் நோக்கில் நிதி அமைச்சர் சர்வதேச நாணய நிதி பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டால் உடனடியாக தாம் பதவி விலகுவதாக வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.
291 total views, 1 views today