மாகாணங்களுக்கு இடையிலான நீண்ட தூர பேருந்துசேவைகளை முன்னெடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்துசேவைகள் தடைப்பட்டமையால் தாம் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துவருவதாக மேற்படி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
காலியில் நேற்று(09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
284 total views, 1 views today