நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியொன்றும் வழங்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சராக, அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், அவர் குறித்த இராஜாங்க அமைச்சுப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளரினால் நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிதி மற்றும் நீதி அமைச்சு பதவிகளுக்கு மேலதிகமாக அவருக்கு, இந்த இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
332 total views, 1 views today