மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் நாளைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, A,B,C ஆகிய வலயங்களுக்கு 4 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட இடங்களில், 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாக்கப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
213 total views, 2 views today