ஒரு நாள் பயணமாக சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் பைசல் பின் பர்ஹான் நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் இன்று அதிகாலை 1.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவருடன், சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சின் 18 அதிகாரிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தள்ளாடிக் கொண்டு இருக்கும் நிலையிலும் நாட்டில் சடுதியாக எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட நிலையிலும் அவருடைய வருகை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட கூடியமை சுட்டிக்காட்டத்தக்கது.
269 total views, 1 views today