Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsநாட்டில் பல பகுதிகளிலும் வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் பல பகுதிகளிலும் வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பெய்துவரும் பலத்த மழை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணித்தியாலங்களில் கிங் கங்கையின் நீர்மட்டம் உயரக்கூடும் என்பதால் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

வெலிவிட்டிய – திவித்துர, பத்தேகம, கொட்டபொல, ஹிக்கடுவ, நியாகம, நெலுவ, தவலம, அக்மீமன, நாகொட, எல்பிட்டிய, போபே பொத்தல மற்றும் காலி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என பிரதேசவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய மலையகத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று (02) இரவு பெய்த கடும் மழை காரணமாக கெனியன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தலா மூன்று அடிக்கு திறக்கப்பட்டுள்ளன.

மேலும், ஹட்டன் – கொட்டகலையில் உள்ள சமதானபுரத்தில் டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து அப்பகுதியில் உள்ள வாய்க்காலொன்றுக்கு பாயும் நீர், நிரம்பி வழிவதால் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, வட்டவளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ரொசல்ல – ஐட்றி பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள நீரினால், விவசாய நிலங்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 254 total views,  2 views today

RELATED ARTICLES

Most Popular