நாட்டின் பல பகுதிகளிலும் இன்றைய தினமும் ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்படி, கொழும்பு – காலி முகத்திடலில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.
அத்துடன், நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டி பகுதியிலிருந்து கொழும்பு – கொச்சிக்கடை – புனித அந்தோனியர் தேவாலயம் வரையில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெக்கப்படுகிறது.
இதேவேளை நுவரெலியாவிலும் ஆர்பாட்டமொன்று இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நுவரெலியா பகுதியிலுள்ள இளைஞர்களால் பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கபட்டுள்ளது.
இதன்போது, நுவரெலியா நகர வியாபாரிகள் தங்களது வர்த்தக நிலையங்களை மூடி தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
223 total views, 1 views today