தற்போதைய நிர்வாகத்தின் கீழ் பிரதமராக பதவிவகிக்கும் எண்ணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிர்வாகத்தின் கீழ் எந்த பதவியையும் ஏற்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகாசங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளபோல் அனைத்து கட்சி அரசாங்கத்தை விரைவில் ஏற்படுத்தாவிட்டால் நாடு விரைவில் கலவரங்களை சந்திக்கும் ஆபத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு நெருக்கடிக்குதீர்வை காண்பதற்கான அறிவும் திறமையும் இல்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி அனைத்து அமைச்சர்களும் பதவிவிலகவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைத்து கட்சி அரசாங்கத்தை உடனடியாக அமைக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர்தற்போதைய அரசாங்கம் பதவி விலகி அனைத்து கட்சி அரசாங்கத்திற்கு வழிவிடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

22வது திருத்தம் ஜனநாயக தன்மையை கொண்டதல்ல ,புதிய சீர்திருத்தங்களிற்கு எதிராக எங்கள் கட்சி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவுள்ளது,22வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி மேலும்  அபகரித்தால் சர்வதேசத்தின் உதவி கிடைக்காது என மைத்திரிபால சிறிசேன கண்டியில் தெரிவித்துள்ளார்.