இந்தியாவின் இந்து பத்திரிகையின் இணையத்தளம் ராஜபக்ச குடும்ப ஆதரவு அரசியலை மீண்டும் ஸ்தாபிக்கும் நோக்கில், இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளதோ என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டரில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். ராஜபக்சவினரின் குடும்ப ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இனவாத ரீதியான உணர்வை தூண்டும் முயற்சியில் இப்படியான செய்தியை அந்த ஊடகம் வெளியிட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக இந்திய புலனாய்வு பிரிவினர் கண்டறிந்த தகவல்கள் ஊடகங்களுக்கு வழங்காது, உரிய முறையில் இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்பட்டிருந்தது எனவும் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்து பத்திரிகையின் இந்த செய்தி சம்பந்தமாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதுடன் அந்த செய்தி சாதாரணமாக தகவல் எனக் கூறியுள்ளது.
இதனிடையே ராஜபக்சவினரின் பாதுகாப்புக்கு இநதிய இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டும் எனவும் பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில ஒருவரான சுப்ரமணியம் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி கருத்தை பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
184 total views, 1 views today