நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாகவில் பாடசாலை, பள்ளிவாசல்கள் மற்றும் பொது இடங்களுக்கு இன்று 12.01.2021 தொற்று நீக்கிகள் தெளிக்கப்பட்டன.
புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் S.M. Rijaj அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க புத்தளம் பிரதேச சபை ஊடாக இன்றைய தினம் நாகவில்லு பாடசாலை, நாகவில்லு பள்ளிவாசல்கள், ரசூல் நகர் பள்ளிவாசல், வைத்தியசாலை, தொழிநுட்ப கல்லூரி, கிளினிக் சென்டர் உட்பட பொது இடங்களுக்கு தொற்று நீக்கிகள் தெளிக்கப்பட்டன.
பாடசாலை ஆரம்பித்திருக்கும் நிலையில் இதுவரை தொற்று நீக்கிகள் தெளிக்கப்படாத நிலையில் இவ்விடயம் குறித்து eNews1st புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் S.M. Rijaj அவர்களுடன் தொடர்புகொண்டு பேசியதை அடுத்து மேற்படி தொற்று நீக்கிகள் இன்றைய தினம் தெளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் வேளைத்திட்டத்திற்கு பள்ளிவாசல் நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கியிருந்ததுடன் ஊரின் பாதுகாப்பு குறித்து மேலதிகமாக கலந்தாலோசிக்கப்பட்டிருந்தமை ஓர் விஷேட அம்சமாகும்.
ஈ நியூஸ் பெஸ்ட் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
300 total views, 1 views today