பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தியை ஸ்திரமாகப் பேணுவதற்காக சீனா இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்குவதாக தெரிவித்துள்ள சீன பிரதமர் லி கெகியான்ங் , இலங்கை தற்போது எதிர்க்கொண்டுள்ள அவசர நிதி நெருக்கடியினை சமாளிப்பதற்கு சீனா இலங்கை அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், சீன பிரதமருக்கும் இடையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலிலேயே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

இரு பிரதமர்களுக்குமிடையிலான தொலைபேசி உரையாடல் தொடர்பில் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவிவித்துள்ளதாவது,

இந்த தொலைபேசி உரையாடலில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்;, இலங்கையில் வர்த்தக பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், சீனாவிலிருந்து அதிகளவு சுற்றுலா பயணிகளை வரவழைத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

‘இலங்கை தற்போது எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி மற்றும் சவால்கள் தொடர்பில் விளங்கிக்கொள்ள முடிகிறது. இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த  நாங்கள் இயலுமான ஒத்துழைப்புக்களை வழங்குவோம்’ என சீன நாட்டு பிரதமர் லீ கெகியான்ங் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தற்போது எதிர்க்கொண்டுள்ள அவசர நிதி நெருக்கடியினை சமாளிப்பதற்கு சீனா இலங்கை அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படும் எனவும் சீன பிரதமர் உறுதியளித்துள்ளார்.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் விரைவான பேச்சுவார்த்தை முன்னெடுத்தல், இலங்கையில் வர்த்தக பற்றாக்குறையை குறைத்தல் மற்றும் இலங்கைக்கு அதிகளவில் சீன சுற்றுலா பயணிகளை வரவழைத்தல் குறித்து இப்பேச்சுவார்த்தையின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

‘இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவினை வலுவான முறையில் முன்னெடுத்து செல்வதற்கு தொடர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்’ என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சீன பிரதமரிடம் குறிப்பிட்டுள்ளார். ‘தற்போதைய நிலையில் நீங்கள் எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையை எம்மால் உணர்வுபூர்வமாக விளங்கிக்கொள்ள முடிகிறது. நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து விடுப்பட நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம்’ என சீன பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

சீனாவினால் இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி வழங்கவும்,தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கவும் தீர்மானித்துள்ளமைக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சீன அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார் என்று பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.