Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsதொடரும் துப்பாக்கி சூட்டு சம்பவம்

தொடரும் துப்பாக்கி சூட்டு சம்பவம்

கம்பஹா – கெஹல்பத்தர பகுதியில் இன்ற (06) பட்டப்பகலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சலூன் ஒன்றிற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இளைஞன் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 198 total views,  2 views today

RELATED ARTICLES

Most Popular