பொதுச் சொத்துக்களைச் சூறையாடுபவர்கள் அல்லது நபர்களுக்கு தீங்கிழைக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் அனைவரின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முப்படையினருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் ஆளும் பொதுஜன பெரமுன ஆதரவாளர்களின் மிலேச்ச தாக்குதலின் பின்னனணியில் உருவான கலவரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உற்பட எண்மர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீ வைக்கப்பட்டுள்ளதுடன் பொது சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
169 total views, 1 views today