நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயற்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இடம்பெற்ற பயங்கர தீவிபத்து ஏற்பட்டதில் பலர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென பற்றிய தீ அங்குள்ள எண்ணெய் கிடங்குகளில் வேகமாகப் பரவியது.
இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்தவர்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளதோடு, மேலும், பலர் கயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதமும் நைஜீரியாவில் சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 25 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
291 total views, 1 views today