கிழக்கு பல்கலைக்கழக மட்டக்களப்பு வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாகத்துக்கு முன்னால் பல்கலைக்கழக மாணவர்கள் மின்சார தடை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீப்பந்தம் ஏற்றி இன்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சமன் தலைமையில் இரவு 7.15 மணிக்கு இடம்பெற்ற இப் பேராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ஊரடங்கு சட்டத்தை மீறி பல்கலைக்கழகத்தில் இருந்து செங்கலடிக்கு எதிர்ப்பு ஊர்வலமாக செல்ல முற்பட்டனர்.
இதன் போது அவர்களை பல்கலைக்கழக வாசலில் வைத்து பொலிசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து போராட்டகாரர்கள்; அரசுக்கு எதிராக பல்வேறு சுலோகங்களை தாங்கியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் தீப்பந்தம் ஏந்தி சுமார் ஒரு மணித்தியாலம் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேவேளை அந்த பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
172 total views, 1 views today