நாடளாவிய ரீதியில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் மாற்று வழிகளை கையாண்டு மண்ணெண்ணெய் அடுப்புகளை பயன்படுத்தி தமது அன்றாட தேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் மண்ணெண்ணெய் அடுப்புக்களை பயன்படுத்துவதால் மண்ணெண்ணெய்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் தலைநகர் கொழும்பில் கொட்டாஞ்சேனை பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்பாக  மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.