Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsதரமுயர்த்தப்பட்ட 7 நகரசபைகள்

தரமுயர்த்தப்பட்ட 7 நகரசபைகள்

இலங்கையில் உள்ள கிராம சபைகள் மற்றும் நகர சபைகளில் மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

ஏழு நகர சபைகள் மாநகர சபை அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

களுத்துறை, வவுனியா, புத்தளம், திருகோணமலை, மன்னார், அம்பாறை மற்றும் கேகாலை ஆகிய நகரசபைகள் மாநகர சபை அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, மூன்று கிராம சபைகளை நகர சபைகளாக மாற்றுவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மொனராகலை ஆகியன கிராமிய சபைகளை  நகர சபைகளாக மாற்றுவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பான பிரேரணையை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன முன்வைத்துள்ளார். 

பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் வினைத்திறனைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 164 total views,  2 views today

RELATED ARTICLES

Most Popular