ஓட்டுநர் இல்லாமல் தானாகவே இயங்கும் டெஸ்லாவின் மின்சார கார் உற்பத்தி குழுவுக்கு தமிழ் நாட்டைச் சேர்ந்த அசோக் எல்லுசுவாமி முதல் ஊழியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்லாவின் நிறுவனரும், தலைமை நிறைவேற்று அதிகாரியுமான எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

அதில், டெஸ்லாவின் மின்சார வாகன ‘ஆட்டோ பைலட்’ குழுவுக்கு முதல் ஊழியராக அசோக் எல்லுசாமி பணியமர்த்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

தானாகவே இயங்கும் பொறியியல் நுட்பத்திற்கான பணிக்கு அசோக் தலைமை தாங்கி குழுவை வழி நடத்திச் செல்வார் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அசோக் எல்லுசுவாமி ஃபோக்ஸ்வேகன் மின்னணு ஆய்வு கூடம் மற்றும் ‘வாப்கோ’ வாகன கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொலைதொடர்பு பொறியியல் இளங்கலை பட்டம் முடித்த எல்லுசுவாமி, கார்னெகி மெல்லான் பல்கலைக்கழகத்தில் ரோபோடிக்ஸ் தொடர்பான படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.