களுத்துறை, கல்பத்த – படகொட பிரதேசத்தில் டீசலுக்கு வரிசையில் நின்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் 63 வயதுடைய ஒருவர் என்றும், இவர் 5 நாட்களாக வரிசையில் இருந்துள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அஹங்கம பிரதேசத்தில் வசித்துவந்த இந்நபர் தனியார் இறப்பர் சேகரிப்பு நிறுவனம் ஒன்றில் சாரதியாக பணிபுரிந்து வந்தவராவார்.
இந்நபர், வரிசையில் காத்திருந்தபோது, அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
227 total views, 1 views today