Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsடலஸ் அழகப்பெருமவின் அதிரடி அறிவிப்பு

டலஸ் அழகப்பெருமவின் அதிரடி அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் வேட்புமனுக்கள் கோரப்படும் போது தானும் வேட்புமனுவை சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், சட்டத்தின் ஆட்சியையும் நல்லிணக்கத்தையும் பேணிப் பாதுகாப்பதன் மூலம் நாட்டை பொருளாதார சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதற்கு தயாராக இருப்பதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக, அக்கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள போதிலும் கட்சி எடுத்த தீர்மானத்தில் மாற்றம் இல்லை என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் வேட்பு மனுக்கள் கோரப்படும் போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தானும் வேட்புமனு அளிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

 171 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular