ஜனாதிபதி எந்த வகையிலும் பதவி விலக மாட்டார் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் தற்போது இடம்பெற்றுவரும் விசேட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உரையாற்ற தொடங்கிய வேளையில், ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது சபையில் ஏற்பட்ட குழப்ப நிலைமையின் காரணமாக சபாநாயகரினால் சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
274 total views, 1 views today