Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஜனாதிபதியின் பல புதிய நியமனங்கள்

ஜனாதிபதியின் பல புதிய நியமனங்கள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி அலுவலகத்தில் பல புதிய நியமனங்களை வழங்கியுள்ளார்.

காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக முன்னாள் அமைச்சர் ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் டினூக் கொலம்பகே ஜனாதிபதி அலுவலகத்தில் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டினூக் கொலம்பகே 2018 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடக மற்றும் தொடர்பாடல் ஆலோசகராக பணியாற்றினார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமை அதிகாரியாக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

 246 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular