எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர்  நிசங்க சேனாதிபதி மற்றும் அவர்து குடும்பத்தார், கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக மாலைதீவு நோக்கி பயணமாகியுள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.

நேற்று திங்கட்கிழமை ( 4) காலை 8.20 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 102 எனும்  விமானத்தில் அவர் இவ்வாறு பயணமாகியுள்ளதாக அறிய முடிகிறது.

அவர் வெளிநாடு செல்லும் போது,  கட்டுநாயக்க விமான நிலையத்தின் கணினி கட்டமைப்பு மற்றும்  பாதுகாப்பு கமரா கட்டமைப்பில்  கோளாருடன் கூடிய நிலைமை ஒன்று  இருந்துள்ளதாகவும்  இவ்வாறான நிலைமைக்கு மத்தியிலேயே  நிசங்க சேனாதிபதி விமான நிலையம் ஊடாக வெளியேறியுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

எவ்வாறாயினும் விமான நிலையத்தின் குறித்த திடீர் கோளாறு  நிலைமை தொடர்பில் பாதுகாப்பு தரப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில்  ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்களான ராஜபக்ஷ  குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர்கள் நாட்டை வீட்டு வெளியேறும் நிலைமைகள் தொடர்பில் சமூக வலைத் தளங்களும் செய்தித் தளங்களும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையிலேயெ ஜனாதிபதிக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவரான எவன்கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதி நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.