Wednesday, September 28, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsசெப்டம்பர் 15 முதல் 'தாமரை கோபுரம்' திறப்பு

செப்டம்பர் 15 முதல் ‘தாமரை கோபுரம்’ திறப்பு

எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி முதல் கொழும்பில் உள்ள “தாமரைக் கோபுரத்தில்” செயற்பாடுகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஏறக்குறைய 113 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்ட தாமரை கோபுரம் மக்கள் மயப்படுத்தப்பட்டதன் பின்னர்,
“கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட்” பல புதிய அனுபவங்களை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இதன் நிர்மாணப் பணிகள் 2022  பெப்ரவரி  28 ஆம் திகதி நிறைவடைந்த நிலையில் இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்காக சீன நிறுவனத்தினால் 88.65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதுடன் மீதியை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது.

இதற்கான கடன் தவணை செலுத்தல் 2024 ஆம் ஆண்டளவில் நிறைவடையவுள்ளதுடன், தற்போது இதற்கான கடன் தொகையில் 66.3936 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, தாமரை கோபுரம் தனியார் நிறுவனமானது, திறைசேரியின் கீழ் இவ்வருடம் மார்சில் ஸ்தாபிக்கப்பட்டது.

மேலும் அதன் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் கணக்காய்வு செய்யப்படுகின்றன.

இங்கு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், எவரும் நுழைவுச்சீட்டை பெற்று இந்த அனுபவத்தை பெறமுடியும் எனவும், அதற்கான நுழைவுச்சீட்டு 500 ரூபா முதல் 2000 ரூபா எனவும், வெளிநாட்டவர் ஒருவருக்கு 20 அமெரிக்க டொலர் பெறுமதியான நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2000 ரூபா நுழைவுச் சீட்டு பெறும் எவரும் வரிசையில் காத்திருக்காமல் வளாகத்திற்குள் நுழைய முடியும், மேலும் எத்தனை முறையாயினும் கூட கோபுரத்தின் உச்சிக்கு செல்ல முடியும்.

மேலும், 500 ரூபா சீட்டை பெறும் ஒருவர், ஒரு முறை மட்டுமே கோபுரத்தின் உச்சிக்கு செல்ல முடியும் என்றும், அடுத்த சில மாதங்களில் நுழைவுச் சீட்டுக்கு பதிலாக QR குறியீட்டை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 318 total views,  3 views today

RELATED ARTICLES

Most Popular