றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற இரண்டாம் தகுதிகாண் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 7 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி, 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து, 158 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 18.1 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்த நிலையில், 161 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.
துடுப்பாட்டத்தில், ஜோஸ் பட்லர், 60 பந்துகளில், ஆறு 6 ஒட்டங்கள், 10 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து, ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
2008 ஆம் ஆண்டு முதலாவது ஐ.பி.எல் தொடரில் சாம்பியனான இராஜஸ்தான் றோயல்ஸ் அணி, அதன் பின்னர் இந்த ஆண்டே மீண்டும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
நாளைய தினம் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியுடன், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.
125 total views, 1 views today