சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகே இன்று காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 79 ஆகும்.

உடல் நலக் குறைவினால் கடந்த வாரம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அதி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று காலை உயிரிழந்துள்ளார்.

சட்டத்தரணியாக பணியாற்றுவதற்கு முன்னர், அவர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் குற்றப் பிரிவில் கடமையாற்றினார்.

அவர் நிதிமோசடி மற்றும் சிக்கலான நிதிக் குற்றங்களை விசாரிப்பதில் புகழ்பெற்ற நிபுணராக இருந்தார்.

துசித் முதலிகேயின் உயிரிழப்பினை உறுதிபடுத்தியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் சாலிய பீரிஸ், சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிறந்த சட்த்தரணிகளில் துசித் முதலிகேயும் ஒருவர் ஆவார். முதலிகே ஒரு கூர்மையான மற்றும் புத்திசாலித்தனமான மனதைக் கொண்டிருந்தார் மற்றும் மனசாட்சியுள்ளவர் என்று அவர் கூறினார்,