குர்து இன போராளிகளின் வசம் உள்ள ஹசாகா நகரில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் உட்பட 3,500-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சிறையை தகர்த்து, அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தங்கள் இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் போராளிகளை விடுவிக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர்.

எனினும் சிறையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த குர்து இன போராளிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி பயங்கரவாதிகள் சிறையை நெருங்க விடாமல் தடுத்துள்ளனர்.

இதில் இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. பல மணி நேரம் நீடித்த இந்த பயங்கர மோதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 77 பேர் கொல்லப்பட்டடுள்ளனர்.

அதே வேளையில் குர்து இன போராளிகள் 39 பேரும் பலியாகியுள்ளனர்.