Saturday, July 2, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsசாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகள் தினம் அறிவிப்பு!

சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகள் தினம் அறிவிப்பு!

சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை நடத்தும் காலப்பகுதியில் திருத்தம் மேற்கொள்ளல் மற்றும் அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்யும் கால இடைவெளியை குறைத்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் காலங்களில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையை ஆகஸ்ட்டிலும், உயர்தரப் பரீட்சையை டிசம்பரிலும் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.

க.பொ.த சாதாரண தரம் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடல் மற்றும் க.பொ.த உயர் தரம் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கும் இடையே எடுக்கும் காலப்பகுதி மற்றும் அரச பல்கலைக்கழகங்களுக்காக மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக எடுக்கும் காலம் அதிகரிப்பதால் மாணவர்கள் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்வதிலும், பல்கலைக்கழக கல்வியைப் பூர்த்தி செய்வதிலும் முறையே அவர்களுடைய வயது முறையே 19 -2 0 மற்றும் 25 – 26 வயதாகின்றதுஎன்பது தெரியவந்துள்ளது.

இப்பரீட்சை முறையில் இருக்கின்ற கட்டமைப்பு ரீதியான பொருத்தமற்ற தன்மை, நடைமுறையிலுள்ள தொழிநுட்ப விதிமுறைகள் தொடர்பாக நிர்வாக ரீதியான தாமதங்களால் உயர் கல்வியை துரிதமாகப் பூர்த்தி செய்து தொழில் சந்தைக்குப் பிரவேசிப்பதற்கு இளைஞர் யுவதிகளுக்கு தேவையற்ற விதத்தில் காலத்தை செலவிட நேரிட்டுள்ளது.

இந்நிலைமை அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியாகவும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் தீமை பயக்குகின்றதென்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், எதிர்வரும் காலங்களில் இந்நிலைமையை மாற்றியமைப்பதற்கு கீழ்க்காணும் வகையில் நடவடிக்கையெடுப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• 10 மற்றும் 11 ஆம் தரங்களின் பாடவிதானங்கள் ஒரு வருடமும் 09 மாதங்களும் கொண்ட காலப்பகுதிக்கு ஏற்றவாறு மீள்கட்டமைத்தல்.

• க.பொ.த சாதாரண தரம் பரீட்சை ஒகஸ்ட் மாதத்திலும், க.பொ.த (உயர் தரம்) பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்துவதற்கும் ஒவ்வொரு பரீட்சைகளின் பெறுபேறுகளையும் 03 மாதத்திற்குள் வெளியிடுவதன் மூலம் ஒட்டுமொத்த செயன்முறைக்காக தற்போது எடுக்கின்ற 45 மாத காலத்தை 32 மாதங்களாகக் குறைப்பதற்கும் அதற்குத் தேவையான தொழிநுட்ப ரீதியான ஏற்பாடுகளை தயாரித்தல்

• உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் மீள் பரிசீலனை செய்யும் செயன்முறை மூலம் பெறுபேறு அதிகரிக்கின்ற மாணவர்கள் இருப்பின் அவர்களுக்கான புதிய வெட்டுப்புள்ளி (இஸட் புள்ளி) வழங்குவதன் மூலம் குறித்த பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கல் மற்றும் குறித்த பொறிமுறையை 2020 தொடக்கம் நடைமுறைப்படுத்தல் போன்றவற்றுக்கு அமைச்சரவை அனுமதியுள்ளது.

 193 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular

Free Service for emergency