சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிலர் இன்று, (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சாங்யோங் ரீ (Changyong Rhee), பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ஏன்-மெரீ கல்டே-வூல்ஃப் (Anne-Marie Gulde- Wolf) மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி டுபாகஸ் பெரிடானுஸெட்யாவான் (Tubagus Feridhanusetyawan) ஆகியோர் இதில் அடங்குவர்.
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
141 total views, 1 views today