கோதுமை மாவின் விலையை ப்றீமா நிறுவனம் அதிகரித்துள்ளது.
அதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமது கோதுமைமா விலையை அதிகரிக்குமாறு அனைத்து முகவர்களுக்கும் ப்றீமா நிறுவனம் அறிவித்துள்ளது.
நேற்று முன்தினம் முதல் அமுலாகும் வகையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையினை செரன்டிப் நிறுவனம் 35 ரூபாவால் அதிகரித்துள்ளது.
கோதுமை மா விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தமது தொழிற் துறை பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கான உரிய சலுகை வழங்கப்படாத பட்சத்தில் உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்து இடை விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
160 total views, 1 views today