Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகோட்டாபாயவை கைது செய்ய பிடியாணை

கோட்டாபாயவை கைது செய்ய பிடியாணை

கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்க ஐக்கிய இராச்சிய அரசாங்கம் தனது சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயற்படுமாறு பிரித்தானியாவின் லிபரல் டெமாக்ரட் கட்சியின் தலைவர் எட் டேவி கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கையின் நிலைப்பாடு தொடர்பான அவசர விவாதத்தின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எட் டேவி, “இலங்கை மக்களுக்கு ஏற்பட்ட பயங்கரமான சூழ்நிலைக்கு” “ராஜபக்சே அரசாங்கத்தின் ஊழல்” மீது மக்கள் கொண்ட அதிருப்தியே என குற்றம் சாட்டினார்.

அத்தகைய நிலையில் “ஜனாதிபதி ராஜபக்ச மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சர்வதேச கைது வாரண்ட் அடங்கிய அரசியல் பொதி” இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையுடன் IMF உடனான பொருளாதாரப் பொதிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

 147 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular