நாட்டை அரசியல் ரீதியாக அபிவிருத்தி செய்வதில் அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தனிமையான பயணத்தை மேற்கொள்வார் என்றால் அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க(Vidura Wickremanayake) தெரிவித்துள்ளார்.
நாட்டின் அபிவிருத்திக்கு அமைச்சரவையை கோட்டாபய நியமிக்க வேண்டும் எனவும், அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கு சரியான அரச உத்தியோகத்தர்களை நியமித்து அமைச்சரவை மற்றும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அரசதலைவர் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்ய முடியாமல் அரசாங்கம், வீழ்ச்சியடையும் என தாம் நம்புவதாகக் தெரிவித்த விக்கிரமநாயக்க, ஐந்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.
அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளுக்கு முகங்கொடுத்து எதிர்காலத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் கல்லெறிவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, எல்என்ஜி விநியோகம் மற்றும் எல்என்ஜி மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதை தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்பதாக இராஜாங்க அமைச்சர் விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இணைய வழியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
343 total views, 1 views today