இலங்கையில் இதுவரை 67 பிள்ளைகள் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 13 பேர் வீட்டிலேயே இறந்துள்ளனர் என குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் கபில ஜயரத்ன (Kabila Jeyaratne) கூறினார்.
இந்த நிலையில் உங்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுமாறும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனாவுக்கு தாமதமாக மருத்துவம் பார்ப்பது உயிருக்கு ஆபத்தாக மாறும் என்றும் எச்சரித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான பிள்ளைகளின் மொத்த எண்ணிக்கை 59,000 ஆகும்.
அவர்களில் இறந்த குழந்தைகளுக்கு நிமோனியா போன்ற வேறு நோய்களும் உள்ளதாக அவர் கூறினார்.
157 total views, 1 views today