நாளை (15) முதல் கொழும்பில் உள்ள அனைத்து கல்வி வலயங்களிலும் இம்முறை கபொத உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் ஒரு தடவை மாத்திரம் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் கொழும்பு கல்வி வலய பணிப்பாளர் ஜி.என். சில்வா தெரிவித்துள்ளார்.
இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தமது அடையாள அட்டையை சமர்ப்பித்து தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியும். அதற்கமைய, நாளை (15) விஷாகா, தர்ஸ்டன், புனித பெனடிக் மற்றும் விவேகானந்தா ஆகிய பாடசாலைகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேற்படி பாடசாலைகளில் தடுப்பூசி பெற்றுக் கொள்ளக்கூடிய பாடசாலை மாணவர்கள்:
விசாகா கல்லூரி : விசாகா கல்லூரி மாணவர்கள் மட்டும்
தர்ஸ்டன் கல்லூரி : தர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் மட்டும்
புனித பெனடிக் கல்லூரி: புனித பெனடிக் கல்லூரி, நல்லாயன் தமிழ் மகளிர் மகா வித்தியாலயம், நல்லாயன் கன்னியர் மடம் ஆகிய பாடசாலை மாணவர்கள்
கொழும்பு விவேகானந்தா கல்லூரி : கொழும்பு விவேகானந்தா கல்லூரி, வுல்பெண்டால் மகளிர் கல்லூரி, கணபதி கல்லூரி, அல் ஹிக்மா கல்லூரி, மத்தியக் கொழும்பு இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலை மாணவர்கள்
இதேவேளை, கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் 21 நாட்களுக்குள் தடுப்பூசிகளை செலுத்தி முடிக்க தீர்மானித்துள்ளதாக கொழும்பு கல்வி வலய பணிப்பாளர் தெரிவித்தார்.
120 total views, 1 views today