அவசர திருத்தப்பணிகள் காரணமாக நாளை மறுதினம் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரையில் இந்த நீர் விநியோகத்தடை அமுலில் இருக்கும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே மற்றும் கடுவளை மாநகர சபை அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதுதவிர, மகரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும், கொட்டிக்காவத்தை மற்றும் முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் நாளை மறுதினம் 16மணி நேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
213 total views, 1 views today