நாளையும் நாளை மறுதினமும் கொழும்பின் பல பகுதிகளில் 28 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை சனிக்கிழமை காலை 08:00 மணி முதல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

கொழும்பு 04, 05, 06, 07, 08, கோட்டை மற்றும் கடுவலை மாநகர சபை பகுதிகள் மற்றும் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபை பகுதிகளிலே 28 மணித்தியால நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

அம்பத்தளையில் இருந்து கோட்டை நீர்த்தாங்கிக்கு செல்லும் பிரதான நீர் பாதையில் திடீர் கசிவு ஏற்பட்டுள்ளதால், அதனை சரிசெய்ய இந்த நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது.