Monday, July 4, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகூட்டுறவு நிலையத்திற்கு அனுமதி

கூட்டுறவு நிலையத்திற்கு அனுமதி

கூட்டுறவு சதுக்க கட்டுமானக் கருத்திட்டத்தின் ஆலோசனை சேவைகள் ஒப்பந்தத்தை வழங்குவதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கூட்டுறவுச் சதுக்கம் எனும் பெயரிலான கூட்டுறவு வர்த்தக நிலையமொன்றை நிர்மாணிப்பதற்காக 2021 ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தின் கீழ் அனைத்துத் துறைகளுக்குமான ஆலோசனைச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஆலோசனைச் சேவை நிறுவனமொன்றைத் தெரிவு செய்வதற்காக தேசிய போட்டி விலைமுறிக் கோரலின் கீழ் விருப்பம் தெரிவித்த 7 நிறுவனங்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் 6 நிறுவனங்கள் குறித்த விலைமுறிக்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளன.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த ஆலோசனைச் சேவைகளுக்கான ஒப்பந்தத்தை நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்காக வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 204 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular