இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 8 மில்லியன்பைஸர் தடுப்பூசிகள், அடுத்த மாத முற்பகுதியில் காலாவதியாகும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
20 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூன்றாம் கொவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்காக, 14 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
எவ்வாறிருப்பினும், 20 வயதிற்கு மேற்பட்டவர்களில், 54 சதவீதமானோர் மாத்திரமே இதுவரையில் மூன்றாம் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
இதன் காரணமாக, எஞ்சியுள்ள 8 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள், அடுத்த மாத முற்பகுதியில் காலாவதியாக உள்ளதென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
195 total views, 2 views today