Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகரம்பையில் துப்பாக்கி சூடு, ஒருவர் படுகாயம்!

கரம்பையில் துப்பாக்கி சூடு, ஒருவர் படுகாயம்!

புத்தளம் பாலாவியில் உள்ள கரம்ப பாலத்திற்கு அருகில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட சூட்டிலே குறித்த நபர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

காயமடைந்த நபர் மதுரங்குளிய பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

காணி தொடர்பான தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்ற அவரது சகோதரரே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 482 total views,  3 views today

RELATED ARTICLES

Most Popular