Wednesday, September 28, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதிரடி அறிவிப்பு

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதிரடி அறிவிப்பு

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்ற சபாநாயகர் தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்பார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரையும் பதவி விலகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ட்வீட் செய்துள்ளார்.

அனைத்துக் கட்சி ஆட்சியை அமைப்பதற்கு கட்சித் தலைவர்கள் உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இதில் சில குளறுபடிகள் இருப்பதாகவும், பல மாற்று வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

சபாநாயகரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் ஜூம் மூலம் கலந்துகொண்டனர். 

 247 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular