Wednesday, September 28, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகடன் திட்டத்தை நிறுத்திய ஜப்பான்

கடன் திட்டத்தை நிறுத்திய ஜப்பான்

இலங்கைக்கான திட்டக்கடன் ஒன்றை ஜப்பானிய நிதி நிறுவனமும் இடைநிறுத்தியுள்ளது.

ஜெய்க்கா என்ற ஜப்பானிய சர்வதேச கூட்டுத்தாபனம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை விரிவாக்கும் திட்டத்துக்காக நிதியுதவியை வழங்கி வந்தது.

எனினும் இலங்கை அரசாங்கம், தாம் சர்வதேச நாடுகளில் இருந்து பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்தப்போவதில்லை என்று கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்த நிலையிலேயே ஜெய்க்கா நிறுவனமும் தமது திட்டக்கடனான 570 மில்லியன் டொலர் நிதியுதவியை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்த கடன் திட்டத்தின்கீழ் ஜப்பானின் தாய்செய் நிறுவனம், விமான நிலையத்தின் இரண்டாவது முனைய விஸ்தரப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்தநிலையில் இலங்கை தமது கடன் மறுசீரமைப்பு செயல்முறையை முடிவுறுத்தும் வரை இந்த நிதியை இடைநிறுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக ஜெய்க்கா அறிவித்துள்ளது.

இதனையடுத்து இந்த திட்டத்தின் தொழிலாளர்களின் பணி ஒப்பந்தத்தையும் ரத்து செய்ய தாய்சேய் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

2024 இல் நிறைவடையும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த முனைய திட்டம் முடிவுறும்போது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஆண்டுக்கு 15 மில்லியன் பயணிகளை கையாளும் திறனைப் பெறும் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 259 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular