Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகஞ்சன விஜேசேகர நசீர் அஹமட் கட்டார் பயணம்

கஞ்சன விஜேசேகர நசீர் அஹமட் கட்டார் பயணம்

வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் கட்டாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதற்காக அவர்கள் நேற்றிரவு டோகா நோக்கி பயணித்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளது.

இதேவேளை, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று அதிகாலை டுபாய் நோக்கி பயணமானார்.

ரஷ்யாவிற்கு விஜயம் செய்யும் நோக்கில் அவர் டுபாய் நோக்கி பயணித்துள்ளார்.

 142 total views,  2 views today

RELATED ARTICLES

Most Popular