வாட்ஸ்அப் செயலியின் முடக்கத்தால் கடந்த திங்கட்கிழமை முதல் 70 மில்லியன் பாவனையாளர்கள் டெலிகிராம் செயலிக்கு மாறி இருப்பது வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு பெரும் அதிச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் திங்கட்கிழமை இரவு திடீரென முடங்கின. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த ஆப்ஸ்கள் திடீரென முடங்கியதால், என்னசெய்வதென தெரியாமல் திகைத்த பாவனையாளர்கள், சில மணி நேரங்களுக்குப் பின்னரே வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் முடங்கியதை அறிந்து கொண்டனர்.
இந்த திடீர் பிரச்சனைக்கு விளக்கம் அளித்த பேஸ்புக் நிறுவனம், தொழில்நுட்ப பிரச்சனையால் செயலிகள் முடங்கியிருப்பதாக தெரிவித்தது. அதன் பின்னர் சுமார் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் ஆப்ஸ்களின் செயல்பாடு இயல்பு நிலைக்கு திரும்பியது. இதன் காரணமாக , ஒரே இரவில் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு சுமார் 51 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்புகளை சந்தித்துள்ளார்.
இதேவேளை , வாட்ஸ்அப் செயலியின் சில மணிநேர முடக்கம், டெலிகிராம் செயலியின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. வாட்ஸ்அப் முடக்கத்தை அனுபவித்த பாவனையாளர்கள் , கடந்த 24 மணி நேரத்தில் டெலிகிராம் செயலிக்கு மாறியுள்ளனர். அதன்படி இதுவரை 70 மில்லியன் புது பாவனையாளர்கள் கிடைத்திருப்பதாக டெலிகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து டெலிகிராம் ஆப் நிறுவனர் பாவெல் துரோவ் (Powell Drive)பேசுகையில்,
இந்நிலையில் அவர்களின் வருகையை தாங்கள் முழுமனதோடு வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார். எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் தொடர்ந்து பயணிப்பதால், டெலிகிராமுக்கு கிடைத்த மிகப்பெரிய சன்மானமாக நினைப்பதாக தெரிவித்த பாவெல் துரோவ் (Powell Drive), இதே வகையில் தங்களின் பயணம் தொடர்ந்து இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரத்தில் டெலிகிராம் செயலியின் வேகம் குறைந்திருப்பதை நாங்கள் அறிவோம் என கூறிய அவர், அதற்கு முக்கிய காரணம் உலகம் முழுவதும் உள்ள பாவனையளர்கள் அதிகளவில் செயலியை பயன்படுத்தியமையே இந்த வேகக்குறைவுக்கு காரணம் எனவும் விளக்கம் கொடுத்துள்ளார்.
அத்துடன் டெலிகிராம் செயலிக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. புதிய பாவனையாளர்களை வரவேற்கிறோம். இன்னும் இந்த செயலியைப் பற்றி அறியாதவர்களுக்கு, அதனை அவர்களிடம் கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 161 மில்லியன் பாவனையாளர்கள் டெலிகிராம் ஆப்பை பயன்படுத்துகின்றனர்” எனக் குறிப்பிட்டார்.
மேலும் ரஷ்யா, தங்கள் நாட்டுக்கு சொந்தமான இணையதளங்கள், வலைப்பின்னல்லளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பேஸ்புக் முடக்கம் உணர்த்திருப்பதாக தெரிவித்துள்ளது.
306 total views, 1 views today